சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லுாரியின் புதிய அதிபராக எச்.எம். அன்வர் அலி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் அவர் நேற்று தனது கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லுாரியின் முன்னாள் அதிபர் எம்.ஐ.மீரா முகைதீன் அவர்கள் தனது அதிபர் பதவியிலிருந்து ஒய்வு பெற்றுச் சென்றமையினால் புதிய அதிபராக எச்.எம். அன்வர் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அதிபர் நியமன நிகழ்விற்கு விசேட அதிதியாக வலயக்கல்விப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா அவர்கள் கலந்து கொண்டதோடு, கௌரவ அதிதியாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் அவர்களும், பாடசாலையில் இருந்து ஓய்வு பெற்ற அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் கல்வி சார், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.