Ads Area

குவைத்தில் இரண்டு இந்தியர்கள் ஒருவரையொருவர் கத்தியால் குத்தி மரணம்.

 குவைத்தில் உள்ள அப்தாலி பண்ணையில் இரண்டு இந்தியர்கள் கத்தியால் குத்தி கொண்டு இறந்துள்ளனர். 


குவைத்தில் இரண்டு இந்தியர்கள் ஒருவரையொருவர் கத்தியால் குத்திக் கொண்டு இறந்துள்ளனர் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது..


அப்தாலி விவசாய துறையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  நேற்று முன்தினம் , பண்ணை வீட்டில் 2 பேர் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் குறித்து பண்ணையின் உரிமையாளரின் சகோதரர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.


இருவரும் ஒருவரையொருவர் கத்தியால் குத்திக் கொண்டு இறந்தார்களா? அல்லது கொலையின் பின்னணியில் வேறு கொலையாளி இருக்கிறாரா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.


மேலும் விசாரணையில் இருவருக்கும் இடையே நடந்த கத்திக்குத்து காரணமாக இரட்டைக் கொலை நடந்துள்ளது தெரிய வந்தது. குவைத் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது  குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை..


தகவல் - குவைத் தமிழ் சோசியல் மீடியா




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe