(NM.முஹமட் ஸாலிஹ்)
இலங்கை பொலீஸ் திணைக்களத்தில் 34 வருட காலமாக சேவையாற்றி இறுதியாக அக்கரைப்பற்று பொலீஸ் நிலையத்தில் கடமையில் இருந்தவாறு கடந்த 2023 /7 /14 அன்று ஓய்வு பெற்று சென்ற சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.எஸ் அப்துல் மஜீத் (சீப் இன்ஸ்பெக்டர்) அவர்களை அட்டாளைச்சேனை, ஆலயடிவேம்பு ,அக்கரைப்பற்று பிரதேச மக்கள் சார்பாக பாராட்டி கௌரவிக்கும் விழா தேசிய ஐக்கிய நல்லிணக்க ஊடகவியலாளர்கள் அமைப்பின் தலைவர் எம் .எஸ். எம் ஜவ்பர் JP( முன்னாள் பிரதி தவிசாளர் ,சிரேஷ்ட ஊடகவியலாளர்) அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை ஜும்மா பள்ளிவாசல் கலாச்சார மண்டபத்தில் அண்மையில் (03/09/2023) விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை நீதவான் நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கௌரவ எம் எஸ் சம்சுதீன் அவர்கள் கலந்து கொண்டார்கள். கௌரவ அதிதியாக அம்பாறை பிராந்திய பொலீஸ் அத்தியட்சகர் ஜே எச் எம் என் ஜெயபத்ம அவர்களும் விசேட அதிதிகளாக அட்டாளை சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி ஸாபிர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ் எல் எம் ஹனிபா, பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் சட்டத்தரணி மற்றும் அக்கரைபற்று போலீஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சதாத் (பிரதம பொலிஸ் அத்தியட்சகர்), அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மற்றும் ஐக்கிய இளைஞர் சமாதான குழுவின் தலைவருமான எம். ஏ அன்சில் சட்டத்தரணி, அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் போலீஸ் ஆலோசனை குழுவின் முன்னாள் தலைவருமான எம் .ஏ .எம் ராசிக் ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகர் ஏ. வாஹித் அட்டாளைச்சேனை ஜும்மா பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி எம் எஸ் ஜுனைத்தீன் அவர்களும் தேசிய பாடசாலையின் அதிபர் ஏ. சி . எம் . ஹரீஸ், கோலாவில் பெரு நாவலர் வித்யாலய அதிபர் தேசகீர்த்தி எம். மணிவண்ணன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போது 34 வருடகால சிறப்பு சேவை செய்த எம். எஸ் அப்துல் மஜீத் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பிரதம அதிதி அவர்களினால் நினைவு பரிசும் நினைவு சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட பொலீஸ் அத்தியட்சகர் ஜே.எச் .எம்.என் . ஜெயபத்ம அவர்களின் சேவையை பாராட்டி பிரதம அதிதி நீதிபதி அவர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு நினைவு பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
அதேபோன்று இப்பிராந்தியத்தில் நீதித்துறையில் சிறந்த சேவையாற்றி வருகின்ற கௌரவ நீதிபதி அவர்களை பாராட்டி ஜும்மா பள்ளிவாசலுடைய தலைவர் சட்டத்தரணி எம் .எஸ் ஜுனைதீன் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா ஆகியவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டவுடன் ஓய்வு பெற்ற உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ. வாஹித் அவர்களினால் பொன்னாடையும் போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
இவ்விழா மிகவும் கோலாகலமாக உலமாக்கள் கல்விமான்கள் ஊடகவியலாளர்கள்,நலன் விரும்பிகளின் பங்களிப்புடன் நடந்தேறியது.
இதன் போது பிரதம அதிதி, கௌரவ அதிதி,விசேட அதிதிகள் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பேன்ட் வாத்திய குழு மாணவர்களால் பூமாலை அணிவித்து பேண்ட் வாத்தியம் முழங்க வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கவிஞர் இளமதி ஜப்பார் அவர்களினால் காவல் துறைக்கோர் காவலன் எனும் தலைப்பில் வாழ்த்துப்பா வாசித்து வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.