Ads Area

சமூகச்சீர்கேடுகளின் கூடமாக மாறியுள்ள கல்முனை இஸ்லாமபாத் பகுதிகளில் உள்ள கைவிடப்பட்ட வீடுகள்.

 (பாறுக் ஷிஹான்)


சுனாமி அனர்த்தம் காரணமாக மக்களினால் கைவிடப்பட்டுள்ள வீடுகளில் அண்மைக்காலமாக சமூகச்சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றன.


அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக பகுதி முழுயளவில் பாதிக்கப்பட்ட வீடுகளில் இவ்வாறு சமூகச்சீர்கேடுகள் இடம்பெற்ற அடையாளங்கள் காணப்படுகின்றன.


குறிப்பாக, வெளியிடங்களிலிருந்து வருகின்ற சிலரின் சட்டவிரோதச் செயற்பாடுகள் போதைப்பொருள் பாவனை ல், பாலியல் செயற்பாடுகளுக்கு இவ்விடங்கள் உடந்தையாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.


குறித்த பகுதியில் இயங்கி வருகின்ற காதி நீதிமன்றத்தைச்சுற்றிக் காணப்படுகின்ற வீடுகள் யாவும் கைவிடப்பட்டு சுமார் 19 வருடங்களாக காடு மண்டிக் காணப்படுகின்றது.


இவ்வாறான வீடுகளிலுள்ள அறைகளில் அரைகுறையாகப் ஆண், பெண்களின் உள்ளாடைகளும் சிதறிக்காணப்படுகின்றன.


போதைப்பொருள் நுகர்ந்த அடையாளங்களும் இவ்வாறான வீடுகளில் தென்படுவதுடன், விசஜந்துக்கள், பாம்புகளின் வாழிடங்களாகவும் இவ்வீடுகள் காணப்படுவதுடன், எவ்வித பாதுகாப்பற்ற இடமாகவும் விளங்குகின்றது.


இவ்வாறு கைவிடப்பட்ட வீடுகள் உரிய பராமரிப்புக்கள் இன்மையினால் அதனருகில் குடியேறி வாழும் மக்கள் கூட அச்சுறுத்தலினால் இடம்பெயர்ந்து வருகின்றனர்.


எனவே, பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இவ்வீடுகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோதமான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முன்வர வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe