Ads Area

சம்மாந்துறை வலய மாணவருக்கான இருநாள் மெய்வல்லுனர் பயிற்சி முகாம் மஜித்புரம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிறைவு.

 ( வி.ரி.சகாதேவராஜா)   


சம்மாந்துறை வலய இருநாள்  மெய்வல்லுனர் பயிற்சி முகாம் நேற்று (8) வெள்ளிக்கிழமை மஜித்புரம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்  நிறைவடைந்தது.


சம்மாந்துறை வலய உடற்கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் ஏ. நசீர் தலைமையில் நேற்று முன்தினம் (7) வியாழக்கிழமை நடைபெற்ற துவக்க நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.வை.யசீர் அறபாத் கலந்து சிறப்பித்தார்.


சிறப்பு அதிதிகளாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.அப்துல் மஜீத், உதவி கல்விப் பணிப்பாளர்களான வீ.ரி.சகாதேவராஜா, ஏ.முஸ்ரக்அலி ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.


வலய மட்ட விளையாட்டு போட்டிகளில் முதலாம் இரண்டாம் இடம் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் இந்த மெய்வல்லுனர் பயிற்சி முகாம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.


எதிர்வரும் 19ஆம் தேதி மாகாணமட்ட விளையாட்டு போட்டிக்கு தயார்படுத்தும் முகமாக இம்முகாம் ஏற்படுத்தப்பட்டது .


மாவட்ட பயிற்றுவிப்பார்களான தாஜுடின், றிபாஸ் ஆகியோர் பயிற்சி வழங்கினார்கள்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe