ஒமானில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சிவகங்கையை சேர்ந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஒமான் நாட்டில் வேலை செய்து வந்த தனசேகர், விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். விமான பயணத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.