ஹிஜ்ராக் கண்ட விவசாய அமைப்பின் புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யும் கூட்டம் திட்ட முகாமையாளர் திருமதி.M.M.Y.இஜ்ஜத் அவர்களின் தலைமையில் ஹிஜ்ராக் கண்ட விவசாய அமைப்பின் பொருலாளர் A.L.A.அஸீஸ் அவர்களின் இல்லத்தில் 2023.09.18 ஆம் திகதி நடைபெற்றது.
இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர்,தேசமானிய அல்ஹாஜ் M.S.M.நவாஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். அத்தோடு பொறியியல் உதவியாளர் R.A.M.V.ரணவீர, அபிவிருத்தி உத்தியோகத்தர் A.றினோசா தொழினுட்ப உதவியாளர் M.T.நப்ரீஸ் முகமட் மற்றும் மல்வத்தை கமநல சேவைகள் நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந் நிகழ்வில் பல்வேறு நீர்ப்பாசன அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமாக பொறியியலாளருடன் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கான விவசாய அமைப்பின் புதிய நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.
ஊடகப் பிரிவு
பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயம்
சம்மாந்துறை