Ads Area

சம்மாந்துறை தேசிய பாடசாலை ஆசிரியர் எம்.எம்.ஏ.காதர் 30 வருடகால ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு.

 சம்மாந்துறை ஐ.எல்.எம் நாஸிம்.


சம்மாந்துறை தேசிய பாடசாலையில் பெளதீகவியல் ஆசிரியராக எல்லோரினதும் மனங்களிலும் இடம்பிடித்த கடமையில் கண்ணியமாகவும் நேர்மையாகவும் செயற்படுபவருமான எம்.எம்.ஏ.காதர் நேற்று (26) தனது 31 வருடகால ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திருமதி யூ.நஜீபா ஏ.றஹீம் தலைமையில் நடைபெற்றது.


சம்மாந்துறையைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் 1963ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் திகதி முஹம்மட் தம்பி, ஆசியா உம்மா ஆகியோரின் சிரேஸ்ட புதல்வராகப் பிறந்தார். 


ஆரம்பக்கல்வியை சம்மாந்துறை அல் முனீர் வித்தியாலயத்தில் கற்று, தரம் 6ல் கல்வி கற்பதற்காக  1976ம் ஆண்டு சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தில் தொடர்ந்தார். 


உயர்தரத்தில் கணிதப்பிரிவில் கல்வி கற்ற இவர், கிழக்கு பல்கலைக்கழக கணிதபீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். 


பெளதீகவியல் ஆசிரியராக 1993ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நியமனம் பெற்றார்.


மேலும், கிழக்கு அபிவிருத்தி அமைச்சின் இணைப்பாளராகவும் 2004ம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி வரையும் நீர்ப்பாசன அமைச்சு இணைப்பாளராக 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி வரையும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை இணைப்பாளராக 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் திகதி வரையும் அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளராக 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் திகதி வரையும் பணியாற்றினார்.


மாவனெல்லை சாஹிரா பாடசாலையிலும் 5 வருடம் கற்பித்துள்ள இவர், ஆசிரியர் சேவையில் 30 வருடங்கள் 03 மாதம் 16 நாள் சேவையாற்றியுள்ளார்.


இவர் தனது சேவைக்காலத்தில்  பெளதீகவியல் ஆசிரியராகவும் விஞ்ஞானப் பிரிவுத்தலைவராகவும் உயர்தரப்பிரிவு   விஞ்ஞானம், கலை, வர்த்தகம், தொழிநுட்ப பாடங்களுக்கான இணைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe