சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லுாரியில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் நேற்று (2023.9.25) அதிபர் எச்.எம். அன்வர் அலி சேர் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
இத்தேர்தலின் இணைப்பாளராக A.L. நபார் ஆசிரியர் அவர்கள் செயற்பட்டார். தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க வலயக்கல்வி அலுவலகத்திலிருந்து உதவிக் கல்விப் பணிப்பாளர் H. நைரூஸ்கான் சேர் அவர்கள் வருகை தந்ததுடன் ஆசிரியர்களையும், மாணவர்களையும், சிறப்பாக ஊக்கப்படுத்தினார்.
பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களும் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தி யோகத்தர்கள் அனைவரும் மிக சிறந்த ஒத்துழைப்புகளை வழங்கி இருந்தமை வரவேற்கத்தக்க விடயமாகும். இதன் மூலம் இத்தேர்தல் மிக சிறப்பாகவும், நேர்மையாகவும், அமைதியாகவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.