( வி.ரி.சகாதேவராஜா)
உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வீதி நாடகம் மற்றும் வீதி ஊர்வலம் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர். இரா முரளீஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணர் டாக்டர். ஜுராச் , வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் டாக்டர்.மதன் மற்றும் வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரிகள் ,வைத்தியசாலையின் கணக்காளர் தாதிய பரிபாலகர் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் பணிப்பாளர் அவர்களின் தற்கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு உரையுடன் ஆரம்பமானது, மேலும் மனநல வைத்திய நிபுணர் அவர்களின் விழிப்புணர்வு உரை இடம்பெற்றது.
மனநல பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் டாக்டர் சராப்டீன் அவர்களின் விழிப்புணர்வு உரை இடம்பெற்றது. தொடர்ந்து வீதி நாடகமானது வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்களான விகுலந்திரகுமார் ,திருமதி. ரி.பாஸ்கரதாஸ்,திருமதி. ஆரா.ஜெயானி, எஸா.தேவகுமார், திருமதி ஜெயந்தினி திரு S.ஸ்ரீதரன் ஆகியோரால் நிகழ்த்தப்பட்ட தற்கொலை தடுப்பு தொடர்பான எண்ணக்கருவும் மனச்சோர்வு ஏற்படும் சந்தர்ப்பங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய எமது வைத்தியசாலையின் தொடர்பு இலக்கம் “1926” பற்றிய விழிப்புணர்வுடன் கூடிய நாடகத்தினை தொடர்ந்து வீதி ஊர்வலம் ஆரம்பமானது.
இவ் ஊர்வலமானது கல்முனை பிரதான வீதியூடாக சென்று கல்முனை பேரூந்து நிலையத்தில் வீதி நாடகம் நிகழ்த்தப்பட்டு கல்முனை பொலிஸ் வீதி வழியாக வைத்தியசாலையை அடைந்தது. அதனை தொடர்ந்து நன்றியுரை மனநல பிரிவின் பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் அழகரெட்ணத்தால் நிகழ்த்தப்பட்டது.