இவ் வருடத்திற்கான நவராத்திரி தின நிகழ்வுகள் சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயத்தில் கடந்த 2023.10.23 ஆந் திகதி வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் தேசமானிய அல்ஹாஜ் M.S.M.நவாஸ் அவர்களின் அழைப்பின் பேரில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் S.L.M.ஹனீபா அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன் கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் காரியாலயத்தின் பொறியியலாளர்களான S.ராஜ்குமார்,A.M.M. அஸ்கி மற்றும் சம்மாந்துறை தொழினுட்பக் கல்லூரியின் அதிபர் S.தியாகராஜா ஆகியோருடன் விசேட சொற்பொழிவாளராக முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர் திரு.தவராஜா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந் நிகழ்வில் சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம், மல்வத்தை விபுலானந்தா தேசிய பாடசாலை ஆகியவற்றின் மாணவிகளின் கலை கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற்றதோடு பொறியியலாளரால் அவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட இந் நிகழ்வுகளை எமது அலுவலகத்தின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரான T.அழகுராஜன் தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவினரால் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஊடகப் பிரிவு
பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயம்
சம்மாந்துறை.