குவைத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட இந்திய செவிலியர் மீது வழக்கு பதிவு.
குவைத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட இந்திய செவிலியர் மீது புகார். முபாரக் அல் கபீர் மருத்துவமனையில் பணிபுரியும் இந்திய செவிலியர் மீது நேற்று பொது வழக்குரைஞர் முன் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி உள்ளூர் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுபோன்ற முதல் புகார் இதுவாகும்.
காசாவில் மருத்துவமனை மீது குண்டுவெடிப்பு மற்றும் பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு ஆதரவாக செவிலியர் தனது சமூக ஊடக கணக்கில் பதிவிட்டுள்ளார். இது இஸ்ரேல் தொடர்பான குவைத்தின் பொது நிலைப்பாட்டிற்கு முரணானது என்றும் குவைத் அரசாங்கத்திற்கு சவால் விடுவதாகவும் அந்த புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால் அந்த செவிலியர் யார் என்பது குறித்த கூடுதல் தகவல்களை அமைச்சகம் வெளியிடவில்லை.
தகவல் - குவைத் தமிழ் சோசியல் மீடியா