மஜீட்புர கிராமத்தின் 57 வருட வரலாற்றில் எமது கமு/சது/மஜீட்புர வித்தியாலய மாணவர்கள் 12 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 4×50 அஞ்சல் ஓட்ட போட்டியில் சாதனை படைத்து மாகாண மட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தினை பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் பாடசாலைக்கும், மஜீட்புர கிராமத்துக்கும் பெருமை சேர்த்த மாணவிகளை கௌரவித்து பாராட்டும் நிகழ்வு அண்மையில் வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர், உதவி கல்விப் பணிப்பாளர், PSI இணைப்பாளர் ஆகியோர்களின் பங்கு பற்றலுடன் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிபர், சகல ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு மாலை அணிவித்து, பதக்கம் அனுபவித்து, அன்பளிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் ஏனைய போட்டிகளில் வெற்றி எட்டிய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர் சேர்த்துள்ளனர்.






