நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளராகக் கடமையாற்றிய டாக்டர் எம்.பி.ஏ.வாஜித் இன்று (2023.10.23) கடமையை ஏற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீன், திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர், நிந்தவூர் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.எம்.றசீன் உட்பட வைத்திய அதிகாரிகள், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.