Ads Area

பசுமையான கல்முனை மாநகரம் : பொலிஸாரின் மரநடுகை வேலைத்திட்டம்.

 பாறுக் ஷிஹான்.


பசுமையான கல்முனை மாநகர மரநடுகை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான மர நடுகையின் கீழ் 150 பயன்தரும் மரங்கள் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடப்பட்டு வருகின்றன.


கல்முனை மாநகரை அழகுபடுத்தும் நோக்குடன்  கல்முனை தலைமையக பொலிஸார் இன்று குறித்த திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.


இந்நிகழ்வு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர் தலைமையில் நடைபெற்றதுடன், கல்முனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல்.புத்திக, கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி சார்பில் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.


இதன் போது, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பல்வேறு குற்றத்தடுப்புப்பிரிவுப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எல்.றபீக்,கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகர், சமூக பொலிஸ் பிரிவுப் பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாஹிட், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர், சுற்றுச்சூழல் பிரிவுப் பொறுப்பதிகாரி ஐயூப், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் குமாரி, பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


எதிர்காலத்தில் சூழலைப்பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் பொது இடங்கள், கடற்கரைப்பிரதேசங்கள், அரச, தனியார் நிறுவனங்கள், மதஸ்தாபனங்கள், வயற்காணிகள் உள்ளிட்ட சகல இடங்களிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் இத்திட்டம்   முன்னெடுக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe