Ads Area

சம்மாந்துறை பொலிஸாரினால் மர நடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்!

 சம்மாந்துறை நிருபர் ஐ எல் எம் நாஸிம்.

இயற்கையை நேசித்து சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ அவர்களின் எண்ணத்தில்  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் அவர்களின் தலைமையில்  சுற்றுச்சூழல் பிரிவுப் பொறுப்பதிகாரி உப  பொலிஸ் பரிசோதகர்  எஸ்.ஐ நசார் அவர்களின் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மர நடுகை ஆரம்ப நிகழ்வு நேற்று (23) நடை பெற்றது.


சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளை அழகுபடுத்தும் நோக்குடன் இத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.


இதன் போது சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எமு.நெளபீர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு  பெறுப்பதிகாரி  உப பொலிஸ் பரிசோதகர் ஏ.டி.ஆர் விஜயவர்த்தன  மற்றும் பொலிஸ் உத்தியோகத்தகர் பொது மக்கள் என பலர்  கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.


சுமார் 200க்கு  மேற்பட்ட மரக்கன்றுகள் பல இடங்களில்  நடப்பட உள்ளமை  குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe