சவூதி அபிவிருத்தி நிதியத்தினூடாக தற்பொழுது நெடுஞ்சாலைகள் அமைச்சுக்குக் கீழ் நடைபெற்றுக்கொண்டிருக்கும் திட்டங்களின் முன்னேற்ற அறிக்கை சம்மந்தமான கலந்துரையாடல் அமைச்சின் செயலாளர் திரு. மாயாதுன்ன அவர்களின் தலைமையில் இன்று (10. 10. 2023) நெடுஞ்சாலைகள் அமைச்சில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின்போது பதுளை - செங்களடி வீதி அபிவிருத்தித் திட்டத்தில் மிகுதியாக இருக்கின்ற 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை குறிஞ்சாக்கேணி பால நிர்மானத்திற்கு பயன்படுத்துவதற்காக அனுமதி கடந்த 25. 09. 2023ம் திகதி வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கான கேள்வி அறிவித்தலை விரைவுபடுத்துமாறும் அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு அவசரமாக கேள்வி அறிவித்தல் ஆவனங்களை சவூதி அபிவிருத்தி நிதியத்திற்கு அனுப்பிவைக்குமாறும் தூதுக்குழுவினால் வேண்டிக்கொள்ளப்பட்டது.
சவூதி அபிவிருத்தி நிதியத்தின் தூதுக்குழு பொறியிலாளர் மசூத் அவர்களின் தலைமையில் வருகைதந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், பணிப்பாளர் நாயகம், திட்டப்பணிப்பாளர்கள், பொறியிலாளர்கள் மற்றும் நிதி அமைச்சின் பிரதியும் கலந்துகொண்டனர்