Ads Area

சம்மாந்துறை பிரதேசத்தில்1kg கோழி இறைச்சி பல்வேறு விலைகளில் விற்பனை! பொது மக்கள் புகார்!

 செய்தி நிருபர் : முபாறக் அஸ்லம்.

 

நாட்டின் கோழி இறைச்சியின் விலை பாரிய அளவில் குறைந்துள்ளன அம்பாறை மாவட்டத்தில் கோழி இறைச்சி விற்பனை நிலையங்களில். பல்வேறு விலைகளில் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.


அதிகாரிகள் கவனம் கொள்ளவில்லையா? என மக்கள் புகார்


கல்முனை சாய்ந்தமருது அட்டாளைச்சேனை போன்ற பல பிரதேசங்களில் 1 kg கோழி 900 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்கின்றனர் எமது பிரதேசத்தில் 1 kg கோழி 1200/1150/1100/1050/ என்ற பல விலையில் 4kg 5kg க்கு மேல் கோழி இறைச்சி கொள்வனவு செய்தால் 950 முதல் 1000 ரூபாய்க்கு மேல் விற்பனை இவ்வாறு கடை உரிமையாளர்கள் பல விலையில் கோழி இறைச்சி விற்பனை.


 செய்ய அனுமதி கொடுத்தது யார்?

இதனை உரிய அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லையா? 

என பொதுமக்கள்  கேள்வி?


இது சம்பந்தப்பட்ட விடயத்தில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி மக்களுக்கு உரிய தீர்வினை பெற்று தருமாறும் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைக்கு மத்தியில் இவ்வாறு உயர் விலையில் விற்பனை செய்கின்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எமது பிரதேச மக்கள் வேண்டுகோள்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe