Ads Area

ஈட்டி எறிதல் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று தங்கம் பெற்ற சம்மாந்துறை அல்-முனீர் வித்தியாலய மாணவனுக்கு ஊர்வலத்துடன் கூடிய பெரு வரவேற்பு.

(வி.ரி. சகாதேவராஜா)


கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் நடத்திய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்த சம்மாந்துறை அல் முனீர் வித்தியாலய மாணவன் யூ .எல் .எம். சஜாத்திக்கு இன்று (4) புதன்கிழமை ஊர்வலத்துடன் கூடிய பெரு வரவேற்பளிக்கப்பட்டது.


 பாடசாலை அதிபர் ஏ.அப்துல் ஜப்பார் தலைமையில் ஊர்வலம் இடம் பெற்று சம்மாந்துறை வலய கல்விப் பணிமனைக்கு வந்தடைந்தது .


அங்கு வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா சாதனை மாணவன் சஜாத்துக்கு மலர் மாலை சூட்டி தங்கப்பதக்கம் அணிவித்து வரவேற்றார் .


கூடவே பிரதி கல்வி பணிப்பாளர்களான திருமதி நிதர்ஷினி மகேந்திரகுமார் , யாஸீன் அரபாத் மொகைதீன், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ. நசீர் (உடற்கல்வி ),வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.


 16 வயதுக்குட்பட்ட ஈட்டியெறிதல் போட்டியில் 44 .14  தூரத்தில் எறிந்து முதலிடம் பெற்று சஜாத் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி இருக்கின்றார் .


இதனைப் பாராட்டி இந்த ஊர்வலமும் இந்த கௌரவமும் வழங்கப்பட்டது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe