Ads Area

அம்பாறையில் இரு மான் கொம்புகள் உள்ளடங்களாக துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை!

 (பாறுக் ஷிஹான்)


இரு மான் கொம்புகள் உள்ளடங்களாக துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மாவட்ட பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


அம்பாறை மாவட்டம் தமண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மிருக வேட்டையில் ஈடுபடுவதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்மவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய இன்று திங்கட்கிழமை (16) மாவட்ட பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஜனோசன் தலைமையிலான குழுவினர் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.


இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வசம் இருந்து இரு மான் கொம்புகள் ரி 56 ரக துப்பாக்கி ரவைகள்-19 எல்.எம்.ஜி ரக தோட்டாக்கள் -03 எம்.16 ரக தோட்டாக்கள்-48 உள்ளிட்ட வெடி பொருட்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்டவர்கள் தற்போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் மாவட்ட பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe