காட்டு யானை மற்றும் முதலை தாக்கி மரணித்த 04 குடும்பத்தினருக்கான நஷ்டயீட்டு காசோலை வழங்கும் நிகழ்வு அண்மையில் (2023.10.12) பிரதேச செயலாளர் அல்ஹாஜ் தேசபந்து S.L. முகம்மத் ஹனீபா தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்ற விவசாய ஆரம்ப கூட்ட நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த 2023 பெப்ரவரி - மார்ச் மாதமளவில் காட்டு யானை தாக்கி மரணித்த மற்றும் சொத்து சேதம் ஏற்பட்டமைக்கான நஷ்டயீட்டினை விரைவாக வழங்குவதற்கு பிரதேச செயலாளர் எடுத்த முயற்சியின் பலனாக இன்று நஷ்டயீட்டு காசோலை வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சிந்தக்க அபேவிக்ரம Sir அவர்கள் கலந்து கொண்டு ஒவ்வொருவருக்கும் தலா 10 இலட்சம் பெறுமதியான காசோலைகளை வழங்கி வைத்தார். இதன் போது உயிரிழப்பு மற்றும் சொத்துச் சேதம் உட்பட மொத்தமாக 52 இலட்சம் பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்மை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இந் நிகழ்வில் விவசாய சம்மேளன தலைவர் AMM. நௌஷாட் (முன்னாள் தவிசாளர்), சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு பொறுப்பான தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் MSM. அஸாறுடீன், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.