சம்மாந்துறை ஐ.எல்.எம் நாஸிம்.
சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சம்மாந்துறை 08 கிராம சேவையாளர் பிரிவில் ஒரே நாளில் யானை தாக்கி 4 இடங்கள் சேதமடைந்துள்ளது.
இன்று (11) அதிகாலை தனியன் யானையொன்று வந்து சென்றாதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் உள் நுழைந்த காட்டு யானை அப்பிரதேசத்திலிள்ள பயன்தரும் வாழை மற்றும் வீட்டுப்பயிர்களைச் சேதப்படுத்தியுள்ளதுடன், வீட்டின் மதில்களும் உடைக்கப்பட்டு வீட்டில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் சேதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வருடம் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி மூவர் நபர்கள் உயிரிழந்துடன், முதலைத்தாக்குதலுக்கு ஒரு நபரும் உயிரிழந்துள்ளாதாக சம்மாந்துறை பிரதேச தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தகர் எம்.எஸ்.எம்.அஸாறுடீன் தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேசத்திற்குள் நாளாந்தம் காட்டு யானைகள் இரவு வேளைகளில் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தி வருவதுடன், இதன் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அதனால், காட்டுயானைகளின் வருகையைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென்று பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.