Ads Area

இஸ்தாபகர் தினம் : தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகம் பொது மக்கள் பார்வைக்கு.

 நூருல் ஹுதா உமர்.

 

தென்கிழக்கு பல்கலைக்கழகம் மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்டு 27 வருடப்பூர்த்தியைச் சிறப்பிக்குமுகமாக தென்கிழக்கு பல்கலைகழக வளாகம் இம்மாதம் 24, 25ம் திகதிகளில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. 


இதன் போது, பிரதான நிகழ்வாக மர்ஹூம் அஷ்ரப் நினைவுப்பேருரை பல்கலைக்கழக பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இதில் பிரதம அதிதியாக மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் புதல்வர் அமான் அஷ்ரப் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.


அத்துடன், 350 மில்லியன் ரூபா செலவில் பல்கலைகழக உத்தியோகத்தர்களுக்கான 4 மாடிகள் கொண்ட இரு வீட்டுத்தொகுதிகள் திறப்பு விழா, மர நடுகை, மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள், குறுந்திரைப்பட வெளியீடு, புதிய கண்டுபிடிப்புகள், புத்தக கண்காட்சி மற்றும் விளையாட்டுப்போட்டி உட்பட பல நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளது.


தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சமூகமயப்படுத்தி மக்களுடன் இணைக்கும் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் வேலைத்திட்டத்தின் ஓரங்கமாகவே பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


பல்கலைகழகத்திற்கு வருகை தருகின்ற பொதுமக்கள் பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு பீடங்கள், நூலகம் மற்றும் இதர இடங்களுக்குச்சென்று அங்கு காட்சிப்படுத்தப்படுகின்ற அனைத்து நிகழ்வுகளையும் கண்டுகளிக்க முடியும்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe