சம்மாந்துறை பிரதேச ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிளைகள் புணரமைப்பு தொடர்பான விஷேட கூட்டம் இன்று 28.11.2023 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், முன்னாள் வட- கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.ஏ.மஜீத் தலைமையில் சாய்ந்தமருதில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட. குழுவின் செயலாளர் ஏ.சி.சமால்டீன் Ex MMC, முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் அதிஉயர்பீட உறுப்பினர்களான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா, ஏ.எம்.ஏ.அஸீஸ் மற்றும் கட்சிப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.