சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்தில் இயங்கும் மாற்றுத்திறனாளி மாணவர் கல்விப் பிரிவிலிருந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 5 மாணவர்கள் சித்தி.
சம்மாந்துறை பிரதேசத்தில் 46 மாற்றுத்திறனுள்ள மாணவர்களுடன் இயங்கி வருகின்ற விஷேட கல்விப் பிரிவில் இருந்து (அல் அர்ஷத் வித்தியாலயம்) இம் முறை (2023) இடம் பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் ஐந்து (05) மாற்றுத்திறனுள்ள மாணவர்கள் தோற்றி ஐவரும் சித்தியடைந்துள்ளனர். அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளரின் தலைமைத்துவமிக்க வழிகாட்டுதலுடன் இன்று இடம் பெற்றது.
சித்தியடைந்த மாணவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டு ஊக்கமளிக்கப்பட்டது. இதனூடாக மாணவர்களது எதிர்கால கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு வழிகாட்டுதலும் ஆலோசனையும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வானது பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டு, அல் அர்சத் வித்தியாலய அதிபர் MA.றஹீம் அவர்களது தலைமையில் இடம் பெற்றதுடன், பிரதேச செயலாளர் அல் ஹாஜ் SL.முஹம்மது ஹனீபா அவர்கள், உதவிப் பிரதேச செயலாளர் UM.அஸ்லம் LLB அவர்களும் விஷேட தேவையுடைய பாடசாலைப் பிரிவின் பொறுப்பாசிரியர், ஆசிரியர்கள், சமூக சேவை உத்தியோகத்தர் AMM.சாபிர் அவர்களும் சமூக சேவை பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி AU.பசீல் அவர்களும் அபிவிருத்தி உத்தியோகத்தர் MT.முஜாஹிடீன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.