பாறுக் ஷிஹான்.
மர்மமான முறையில் உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இன்று (6) மாணவன் மர்மமாக மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட மத்ரஸா எனும் பாடசாலைக்கு அம்பாறை சிறப்பு தடயவியல் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீனின் விசாரணைக்குப்பின்னர் குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக பெற்றோர்கள் குறிப்பிட்டதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
இதே வேளை, நேற்றிரவு கைதான குர்ஆன் மத்ரஸா நிர்வாகி பாதுகாப்பாக சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், புலன்விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், குடும்பத்தில் மூத்தவரனான எனது மகன் கடந்த ஒக்டோபர் மாதம் 14ம் திகதி குறித்த மத்ரஸாவில் இணைந்ததாகவும் அவருக்கு மாதமொருமுறை 10 ஆயிரம் செலுத்தியதாகவும் இணைப்புக்கட்டணமாக ருபா 25 ஆயிரம் செலுத்தியதாகவும், 2 மாதம் கூட இன்னும் ஆகவில்லை.
மௌலவி தொலைபேசியூடாக மகனின் சடலத்தைக் காண்பதாகவும் கண்ணீர் மல்க சிறுவனின் தந்தையார் குறிப்பிட்டார்.
செய்தியின் பின்னணி - https://www.sammanthurai24.com/2023/12/Sainthamaruthu-mathrasa.html