Ads Area

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக டாக்டர் சஹீலா இஸ்ஸதீன்!!



நூருல் ஹுதா உமர்


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக டாக்டர் சஹீலா இஸ்ஸதீன் கடமையேற்க உள்ளார். 


 இவர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையேற்க உள்ள முதலாவது பெண் அதிகாரியாவார். மருத்துவ துறையில் 35 வருட சேவைக் காலத்தை கொண்ட இவர் சாய்ந்தமருதின் முதலாவது பெண் மருத்துவ கலாநிதியும்,  மருத்துவ நிர்வாகத்துறையில் முதலாவது முஸ்லிம் பெண் நிர்வாக உத்தியோகத்தரும் என்பது குறிப்பிட்டத்தக்கது.


சாய்ந்தமருது முன்னாள் மரண விசாரணை அதிகாரி மர்ஹும் ராசிக் காரியப்பரின் புதல்வியும், ஓய்வுபெற்ற பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் ஏ. இஸ்ஸதீன் அவர்களின் மனைவியும் ஆவார். 


சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி , கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் நிந்தவூர் தள வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றி நிறுவனம் சார்பான போட்டிகளில் பங்கு பற்றி தேசிய மற்றும் மாகாணத்தில் பல வெற்றிகளைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe