FAROOK SIHAN-பாறுக் ஷிஹான்
பெரிய நீலாவணை, சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் இவ்வாண்டிற்கான வருடாந்த இறுதி அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய உள்ளக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் தலைமையில் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க ஒருங்கிணைப்பில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம கலந்து கொண்டு அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார்.
இதன் போது, பொலிஸ் உத்தியோகத்தர்களின் உடைகள், விடுதிகள், அலுவலகங்கள் என்பவற்றை பார்வையிட்டதுடன், பொலிஸ் நிலையத்திலுள்ள வாகனங்களின் நிலையையும் பரிசோதனை மேற்கொண்டார்.