Ads Area

அரபு எழுத்தணி கொழும்பு, பாத்திமா கல்லூரி மாணவியின் அபார திறமை.

 கம்பியூட்டரில் வரைந்ததை போல், பார்ப்போரை ஆச்சரியப்படுத்திய அரபு எழுத்தணி கொழும்பு, பாத்திமா கல்லூரி மாணவியின் அபார திறமை

 

கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள பாத்திமா முஸ்லிம் பெண்கள் கல்லூரியின் 11ம் ஆண்டு மாணவி கதீஜா மொய்சுல் கர்னி கல்வியில் மட்டுமல்லாது கலையிலும் தனது அபார திறமையை வெளிக்காட்டி வருகின்றார்.


கடந்த 16ம் திகதி கொழும்பு 2, கிச்சிலான் மண்டபத்தில் நடத்தப்பட்ட RISE UP ACADEMY யின் 2வது பட்டமளிப்பு விழா மற்றும் கண்காட்சி நிகழ்வின் போது மாணவி கதீஜா தனது கைப்பட வரைந்த அரபு எழுத்தணியை காட்சிப் படுத்தியிருந்தார்.


பார்ப்பதற்கு அச்சு அசலாக கணிணி தொழிநுட்பத்தில் செய்து பிரின்ட் எடுத்ததை போல் காணப்பட்ட குறித்த அரபு எழுத்தணி பதாகை அருகில் சென்று பார்க்கும் போது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.


11ம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி தனது முழு நேரத்தையும் செலவு செய்து குறித்த எழுத்தணியை தனது கைப்பட வரைந்துள்ளமையை அறிந்து கொள்ள முடிந்தது.


எழுத்தணியை பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட்டதுடன், மாணவியின் அபார திறமையை பாராட்டியமையும் குறிப்பிடத் தக்கதாகும்.


 குறித்த மாணவியின் திறமைக்கு மரியாதை கொடுக்கும் வகையில் RISE UP ACADEMY சார்பில் அவருக்கு வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டதுடன், மாணவிக்கு உட்சாகமளிக்கும் வகையில் குறித்த எழுத்தணி பதாகையை RISE UP ACADEMY நிறுவனமே பெற்றுக்கொண்டு தமது கல்லூரியில் காட்சிப்படுத்தியுள்ளதுடன் மாணவிக்கான ஊக்கத் தொகையாக 25 ஆயிரம் ரூபாயும் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.






 

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe