சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
சம்மாந்துறை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 1400மில்லிகிராம் ஐஸ் மற்றும் 1800 மில்லி கிராம் ஹஸீஸ் ,2250 மில்லி கிராம் ஹெரோயின் எனும் போதைப்பொருளுடன் இருவரை கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்மாந்துறை பெருங் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினர் சம்மாந்துறை கல்லரிச்சல் பகுதியில் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே 1400மில்லிகிராம் ஐஸ் மற்றும் 1800 மில்லி கிராம் ஹஸீஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்மாந்துறையில் மேற்கொள்ளப்பட்ட இன்னுமொரு சுற்றுவளைப்பின் போது 2250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று(21) மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது மோப்ப நாய் உதவியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.