Ads Area

சம்மாந்துறை '89 Born அமைப்பின் அனுசரணையில் மாற்றுத்திறனாளிகள் கெளரவிப்பு !!

 


சம்மாந்துரை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்,ஏ.கே. ஹஷான் அஹமட்


ஐ.நா பொதுச்சபையால் டிசம்பர் மாதம் 3ம் திகதி சர்வதேச மாற்றுத்திறனாளிகளின் தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


அதற்கமைய சம்மாந்துறை பிரதேச செயலக சமூக சேவைப்பிரிவின் ஏற்பாட்டிலும்  '89 Born அமைப்பின் அனுசரணையிலும் சம்மாந்துறை அல் அர்சத் மஹா வித்தியாலய  கேட்போர் கூடத்தில் *"அங்கவீனமுற்ற நபர்கள் தொடர்பில், அவர்களுடன் மற்றும் அவர்களினால் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளினை அடையச் செய்வதற்கு செயலில் ஒன்றினைதல்”* எனும் அரசாங்கத்தின் இவ்வருட தொனிப்பொருளுடனான நிகழ்வு   புதன்கிழமை (20)நடைபெற்றது.


இன் நிகழ்வில் மாற்றுத்திறனாளியாக இருந்து கொண்டு சிறந்த தொழில் முயற்சியாளர்களாக செயற்பட்டுவரும் 12 பேர் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்களும்,பணப்பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், சிறந்த தொழில் வழங்குநர்களாக 02 பேர் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.


மேலும் இந்நிகழ்வின் கதாநாயகர்களான சம்மாந்துறை அல் அர்சத் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய 58 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்  '89 Born அமைப்பினால் வழங்கப்பட்டதுடன், இம்மாணவர்களுக்கு கற்பிக்கும்  இரண்டு அரச சார்பற்ற ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். மேலும் இம்மாணவர்களில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 5 மாணவர்களும் கா.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்த 2 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். இவ்வாறு கௌரவிக்கப்பட்ட 7 மாணவர்களுக்கும் இந்நிகழ்விற்கு அதிதியாக அழைக்கப்பட்டிருந்த சம்மாந்துறை வர்த்தக சங்கத்தலைவர் ஏ.ஹக்கீம் அவர்களினால் விசேட பணப்பரிசிலும் வழங்கி  வைக்கப்பட்டது.


சம்மாந்துறை பிரதேச செயலக நலன்புரி சங்கத்தின் அனுசரனையில் விசேட தோவையுடைய மாணவர்களின் கல்வி செயற்பாட்டிற்காக கலர் பிரிண்ட் மெஷின் அன்பளிப்பு செய்யப்பட்டது.


இன் நிகழ்வில் அம்பாறை மாவட்ட பொறியியலாளர் ஏ.எம் ஸாஹிர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா, உதவி பிரதேச செயலாளார் யு.எம் அஸ்லம், 

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் ஐ.எம் ஹனீபா, சம்மாந்துறை அல் மஜ்லிஸ் அஸ்ஸுரா தலைவர் எம்.ஐ அமீர், சம்மாந்துறை வர்த்தக சங்க தலைவர்  ஏ.ஹக்கீம், பாடசாலை அதிபர் ஏ.எம் றஹீம், சமூக சேவை உத்தியோகத்தகர்கள் மற்றும் '89 Born  அமைப்பின் அங்கத்துவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.


மேலும் இந்நிகழ்வில் '89 Born அமைப்பினால் அண்மைக்காலமாக செய்துவரும் சமூகசேவைப்பணிகள் தொடர்பாக உதவி பிரதேச செயலாளார் யு.எம் அஸ்லம் அவர்கள் தனது வரவேட்புரையில் பாராட்டியதோடு சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் சேவைப்பாராட்டு நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


சம்மாந்துறை எல்லைக்குட்பட்ட 1989ம் ஆண்டில் பிறந்த ஆண்கள் அனைவரையும் அங்கத்தவராகக் கொண்டு செயற்படும் இவ் அமைப்பானது *"ஒன்றிணைந்த நண்பர்கள்  மூலம் அபிவிருத்தி அடைந்த சமுதாயம்"* எனும்தொனிப்பொருளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அங்கத்தவர்களின் தனிப்பட்ட பங்களிப்பு மூலமாக திரட்டி பணத்தொகை மூலம் பல சமூக சேவைவேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe