முஹம்மது ஹஸன் அலி என்ற ஏமன் நாட்டைச் சார்ந்தவரைக் கொலை செய்த குற்றத்திற்காக இந்தியாவைச் சார்ந்த கலாமுதீன் முகம்மது ரஃபீக் என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாய்தகராறு காரணமாக ஏற்பட்ட சண்டையில் கலாமுதீன் கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மரண தண்டனையை எதிர்த்து கலாமுதீன் அனுப்பிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அண்மையில் தம்மாமில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.