சம்மாந்துறை அன்சார்.
குவைத்தில் அப்துல்லா அல்-முபாரக் பகுதியில் கடந்த ஆண்டு ரமலான் மாதத்தின் முதல் நாளில் தனது சக இந்திய ஊழியரை கத்தியால் குத்திய எத்தியோப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்ற குவைத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சமையல் வேலைகளை இருவருக்கிடடையில் பங்கிடுவது தொடர்பாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த வருடம் புனித ரமழான் மாதத்தில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த பெண் தனது இந்திய சக ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்தார் இதையடுத்து, சட்ட அமலாக்கப் பணியாளர்கள், புலனாய்வுக் குழுக்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து விசாரனைகளை மேற்கொண்டதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில் தற்போது வழக்கின் தீர்ப்பு வெளியாகி அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
செய்தி மூலம் - https://www.arabtimesonline.com/news/ethiopian-woman-to-be-executed-for-indian-colleagues-stabbing/