Ads Area

சம்மாந்துறையில் டேலண்ட் ப்ளஸ் ஊடக விருது : எமது பிராந்திய நிருபர்களுக்கும் கௌரவம்.

சம்மாந்துறை டேலண்ட் ப்ளஸ் கலை, இலக்கிய, ஊடக வலையமைப்பினால் சாதனையாளர்கள், திறமையானவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வலையமைப்பின் ஸ்தாபகர் அல்ஹாபிழ் ரிஷான் முஹம்மட் சில்ஹான் தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.


இந்த நிகழ்வில் சம்மாந்துறை டேலண்ட் ப்ளஸ் கலை, இலக்கிய, ஊடக வலையமைப்பினால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள், ஏனைய கல்விசார் சாதனையாளர்கள், ஊடகவியலாளர்கள், கலை, இலக்கிய ஆளுமைகள் எனப்பலரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.


இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு மற்றும் மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழு செயலாளர் ஏ. மன்சூர், கிழக்கு மாகாண பிரதிப்பிரதம செயலாளர் (நிர்வாகம்) எம்.எம். நஸீர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மேலும் கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். எம்.ஹனீபா, இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஸ்ஸான், சம்மாந்துறை நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ், சம்மாந்துறை வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம். எச்.எம்.ஆஸாத், இலங்கை உயர்தொழிநுட்பவியல்  நிர்வக பணிப்பாளர் எஸ்.எல். முஸ்தபா, இலங்கை உயர்தொழிநுட்பவியல்  நிர்வக பிரதம கணக்காளர் எஸ்.ஏ. ஜிப்ரி உட்பட முக்கிய அரச உயரதிகாரிகள், முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், சம்மாந்துறை முச்சபை நிர்வாகிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


இதன்போது பிராந்தியத்தின் முன்னணி ஊடகவியலாளர்களான நூருல் ஹுதா உமர், பாரூக் ஷிஹான், றியாத் ஏ மஜீத், ஐ.எல்.எம். நாஸிம், எம். பி.எம்.ரிம்ஸான், ஏ.கே. ஜௌபர் ஆகியோருக்கு ஊடகத்துறைக்கான கௌரவமும் தாருஸபா ஊடகவலையமைப்புக்கு ஊடக நிறுவன விருதும், பிரதேச அறிவிப்பாளர்களுக்கு அறிவிப்பாளர் கௌரவமும் வழங்கி வைக்கப்பட்டது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe