Ads Area

சம்மாந்துறை ஜமாலியா பாடசாலைக்கு முன்னாள் அபிவிருத்தி நிறைவேற்று குழுவினரால் Speech Podium வழங்கி வைப்பு.

சம்மாந்துறை ஜமாலியா பாடசாலைக்கு அப் பாடசாலையின் முன்னாள் அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளரினால் Speech Podium எனும் சாதனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


பாடசாலைகளில் இடம் பெறும் எந்த நிகழ்வுகளானாலும்  உரை நிகழ்த்த மிக முக்கியமாக உபயோகப்படும் Speech Podium எனும் சாதனம் சம்மாந்துறை ஜமாலியா பாடசாலைக்கு    மிக   நீண்ட    கால தேவையுடையதாக இருந்து வந்தமையினையினால்  இத் தேவையினை நிவர்த்தி செய்யும் முகமாகவும் பாடசாலைக்கு    புதிதாக கடைமையேற்று மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும்.   கடமையாற்றும்  அதிபர் A.M.றிஸ்வான் அவர்களை கௌரவிக்கும் முகமாகவும் பாடசாலையின் நன்மை கருதியும் இவ் உபகரணத்தினை தங்களது சொந்த நிதியினுாடாக பாடசாலையின் முன்னாள் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் எம்.ஐ.எம். ரிஸ்விகான் மற்றும் உறுப்பினர் எம்.எஸ்.முனாஸ் ஆகியோர் இன்று அதிபரிடம் வழங்கி வைத்தனர்.


இந் நிகழ்வில் சம்மாந்துறை உயர் சபைகளான மஜ்லிஸ் அஷ்ஷுறா மற்றும் நம்பிக்கையாளர்.   சபையின்        கௌரவ உறுப்பினர்களும் எமது   வலயக்     கல்வி பணிமனையின்.    உதவிக்        கல்விப் பணிப்பாளர்.     அவர்களும்        ஆசிரிய ஆசிரியைகளும் கலந்து   சிறப்பித்தனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe