Ads Area

சம்மாந்துறை ஜமாலியா மற்றும் ஸபூர் வித்தியாலய மாணவ-ஆசிரியர்களுக்கான உள விருத்திச் செயலமர்வு

கமு/சது/ஜமாலியா வித்தியாலய, கமு/சது/ஸபூர் வித்தியாலய ஆசிரியர்களுக்கும், இடைநிலைப் பிரிவு மாணவர்களுக்குமான உளவிருத்திச் செயலமர்வு சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டரங்கில் 18.01.2024 வியாழக்கிழமை இடம்பெற்றது. 


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறைக் கல்வி வலய கல்வி நிர்வாகத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் PMY. அறபாத் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.


இந்நிகழ்வில் மாணவர்களுக்கான உள விருத்திச் செயலமர்வு வளவாளராக அம்பாரை மாவட்ட செயலக உளவளத்துணையாளர் மனூஸ் அபூபக்கர் அவர்களும், ஆசிரியர்களுக்கான உள விருத்திச் செயலமர்வு  வளவாளராக ஆசிரிய ஆலோசகர் M.S.சிறாஜுடீன் அவர்களும் கலந்து கொண்டனர்.


மேலும் இந்நிகழ்வில் கமு/சது/ஜமாலியா வித்தியாலய அதிபர் A.முகம்மட் றிஸ்வான், கமு/சது/ஸபூர் வித்தியாலய அதிபர் M.B.M. சாபிர், கமு/சது/அல் ஹம்றா வித்தியாலய அதிபர் S.H.M.பரீஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe