சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
அம்பாறை இங்கினியாகலையில் உள்ள சேனநாயக்கா சமுத்திரத்தின் ( இங்கினியாகல நீர்த்தேக்கம் ) நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதால் அந்நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை இன்று காலை மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக திறக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா, உதவி பிரதேச செயலாளர் யு.எம் அஸ்லம் சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஆறுகள்,குளங்களை தற்போதைய கள நிலவரங்களை ஆராய்வதற்கு திடீர் விஜயம் ஒன்றினை இன்று (2) மேற்கொண்டிருந்தனர்.
தொடர்ந்து மழையுடனான வானிலை தொடருமானால் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தாழ்நிலப் பிரதேசங்கள் மூழ்குவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் அழைத்துச் செல்வதற்குரிய முன்னாயத்த ஏற்பாடுகளை சம்மாந்துறை பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளதோடு பிரதேச செயலாளர் தாழ்நிலப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அப்பிரதேச இளைஞர்களுடனான விசேட கலந்துரையாடலும் இடம் பெற்றிருந்தது.
சம்மாந்துறை நெய்னாகாடு ஆறு,சம்மாந்துறை பல்லாறு,கல்லோய இடது கரை ஆறு போன்ற இடங்களை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.