சம்மாந்துறை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் வீழ்ந்த ஆல மரத்தை அகற்றும் பணியை இன்றும் சம்மாந்துறை பிரதேச சபை முன்னெடுத்துள்து.
சம்மாந்துறையில் நேற்று மாலை வீசிய பலத்த காற்றினால் அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் காணப்பட்ட மிகப் பழமை வாய்ந்த மரம் வீழ்ந்தமையினால் கட்டிடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுடிருந்தது.
சம்மாந்துறை பிரதேச சபையுடன் இராணுவத்தினர் மற்றும் பாடசாலை சமூகம் ஆகியன ஒன்றிணைந்து இன்றைய தினம் வீழ்ந்த மரத்தை அகற்றும் பணியை முன்னெடுத்தனர்.
இதன்போது அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று மதியம் பாடசாலைக்கு நேரடிய விஜயம் செய்து பார்வையிட்டனர்.
#தகவல் மையம்
#சம்மாந்துறை பிரதேச சபை
0672030800