அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களுள் முதன் முதலாக அரசாங்கத்தின் நலன்புரி சேவையினை முன்னெடுப்பதற்காக தனியான நலன்புரி நன்மைகள் பிரிவு (அஸ்வஸ்ம) தாபிக்கப்பட்ட பிரதேச செயலகமாக சம்மாந்துறை பிரதேச செயலகம் விளங்குகிறது.
நேற்று (01.01.2024) இடம்பெற்ற இந்நிகழ்வு சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் எஸ் .எல் முகம்மது ஹனிபா அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளர் திரு. சிந்தக அபேவிக்ரம அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பிரிவு நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தார்.
இதனூடாக அஸ்வஸ்ம பயனாளிகளுக்கான சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்.UM.அஸ்லம், கணக்காளர் IM.பாரிஸ், நிர்வாக உத்தியோகத்தர் JM. ஜெமீல், கிராம நிர்வாக உத்தியோகத்தர் AL. தாஸிம், சமூக சேவை உத்தியோகத்தர் சாபிர் உட்பட விடய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.