Ads Area

காரைதீவு- மாவடிப்பள்ளி வீதியும் வெள்ளத்தில் முழ்கியுள்ளது : இளைஞர்கள் வயல் நிலங்களை ஆறுகளாக உயயோகிப்பு!



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்,ஏ.கே ஹஸான் அஹமட்,ஜே.றோஸன் அக்தர்


காரைதீவு மாவடிப்பள்ளி வழியாக அம்பாறை செல்லும் பாதை வெள்ளத்தினால் மூழ்கி போக்குவரத்து ஸ்தம்பிதமாகியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழைகாரணமாக பெரிய பாலத்திற்கும் சின்ன பாலத்திற்கும் இடையில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இன்னும் மழைபெய்தால் முற்றாக போக்குவரத்து தடைப்படும் அபாயம் உள்ளது.


அது மட்டுமின்றி தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக வயல்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி நீர் நிலை போன்று காட்சியளிப்பதுடன் இளைஞர்கள் ஆறுகளாக மாறியுள்ள வயல் நிலங்களை குளிப்பதற்காக பயன் படுத்துவதை அவதானிக்க கூடியதாக இருந்தது. பெருமளவிலான மக்கள் அக் காட்சியை பார்வையிடுவதற்கு திரண்டு அந்த இடத்திற்கு  வருகை தந்த வண்ணம் உள்ளனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe