நாபீர் பவுண்டேஷனின் நிந்தவூர்.
மகளிர் அமைப்பினருடன் சமூக சேவை மற்றும் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு நபீர் பவுண்டேஷன் மகளிர் அமைப்பின் நிந்தவூர் பொறுப்பாளர் சல்மா அவர்களின் இல்லத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.
குறித்த ஒன்றுகூடல் நிகழ்வில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாபீர் பவுண்டேஷன் களமிறங்குவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் கடந்த காலங்களில் நாபீர் பவுண்டேஷன் மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும்,தொடர்ச்சியான அதன் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாபீர் பவுண்டேஷன் மகளிர் அமைப்பினர் மற்றும் நாபீர் பவுண்டேஷனின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தோடு நாபீர் பௌண்டேஷன் ஸ்தாபகர் பொறியியலாளர், கலாநிதி உதுமான்கண்டு நாபீர் அவர்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பாசக்கவி பாயிஸ் கரீம் கலந்து சிறப்பித்தார்.