Ads Area

அம்பாறை -அக்கரைப்பற்று பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட '' யுக்திய'' பரிசோதனை !

 (பாறுக் ஷிஹான்)


சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக பொலிஸாரினால் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிராந்தியத்தில் திட்டமிட்ட குற்றச்செயல்களையும் ஆபத்தான போதைப்பொருட்களை கடத்துவதையும் தடுப்பது மிகவும் அவசியமான நோக்கமாக யுக்திய பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


குறித்த சோதனை நடவடிக்கையானது இன்று மாலை முதல் இரவு வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


இதன்போது மட்டக்களப்பு - அக்கரைப்பற்று பிரதான வீதி மற்றும் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி ஊடாக போக்குவரத்தில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் பாலமுனை பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை சாவடிக்கு அருகாமையில் சோதனை செய்யப்பட்டு போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்குரிய தொலைபேசி இலங்கங்கள் எழுதப்பட்ட ஸ்டிக்கர்களும் பேருந்துகளில் பொலிஸாரால் ஒட்டப்பட்டன. அத்துடன் பொலிஸ் மோப்ப நாய் உதவியுடன் இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இப்பரிசோதனை நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம ஆலோசனைக்கமைய அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.கே பண்டார வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி தேசப்பிரிய பத்ரன மேற்பார்வையில் அக்கரைப்பற்று திருக்கோவில் இறக்காமம் நிந்தவூர் காரைதீவு உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்விசேட சோதனை நடவடிக்கையில் இணைந்திருந்தமை குறிப்பித்தக்கது.


மேலும் நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைதானவர்களிடமிருந்து ஐஸ் ஹெரோயின் போதை மாத்திரைகள் உள்ளிட்டவைகள் மீட்கப்பட்டு வருகின்றன.அத்துடன் போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி முதல் தற்போது வரை குற்றச் செயல்கள் கணிசமானளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe