சம்மாந்துறை நயினாகாடு மற்றும் மல்வத்தை பகுதிகளின் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்பில் தொடர்பிலான ஆய்வு நேற்று முன்தினம் (20) அம்பாறை பொது பிரதி ஆணையாளர் திரு.சிந்தக அபேவிக்ரம தலைமையில் இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நயினாகாடு பிரதேசம் மற்றும் மல்வத்தை பிரதேசத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் தொடர்பில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர் நேற்று பார்வையிட்டனர்.
இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக செயலாளர் மொஹமட் ஹனிபா நயினாகாடு பிரதேசம் மற்றும் மல்வத்தை பிரதேசத்தில் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப். அனீஸ், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் திரு.ரியாஸ், உலக உணவுத் திட்ட உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமசேவா உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.