சம்மாந்துறையில் சிறந்த கல்விமான்களை உருவாக்க எமது முச்சபைகள் மற்றும் கல்விமான்கள் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும் என முன்னாள் சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளரும் பொலனறுவை மாவட்ட சிரேஷ்ட நீர்ப்பாசன பொறியியலாளருமான எம் எஸ் எம் நவாஸ் தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறை நிஸ்மியா பாலர் பாடசாலையின் வருடாந்த மாணவர் விடுகை விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நமது குழந்தைகளை சிறந்த ஒழுக்க விழுமியம் கொண்ட கல்விமான்களாக உருவாக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும் சம்மாந்துறை என்பது இந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய ஒரு ஊராகும் இங்கு சிறந்த கல்விமான்களை உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டியது அவசியமாகும் எனவும் தெரிவித்தார்.
சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் வெகு விமர்சையாக அப்பாட சாலையின் பணிப்பாளர் முபின் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.