Ads Area

சம்மாந்துறை நெய்னாகாடு கிராம மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய மு.கா பிரதித்தலைவர் ஹரீஸ் !

 நூருல் ஹுதா உமர்.

 

தொடர்ச்சியாக பெய்த மழைவீழ்ச்சி காரணமாகவும் வெள்ளநீரை கட்டுப்படுத்த அணைக்கட்டுக்களை திறந்து விட்டமையாலும் கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம் வெள்ளப்பெருக்கால் நிலைகுலைய செய்யப்பட்டிருந்தது. இதனடிப்படையில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சம்மாந்துறை பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள நெய்னாகாடு கிராம மக்களை சம்மாந்துறை தாருஸலாம் மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் சில நாட்களுக்கு முன்னர் சந்தித்து பேசிய பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இன்று அந்த மக்களுக்கு தேவையான உலருணவுப்பொதிகளை கையளித்தார். 


நெய்னாகாடு ஜும்மா பெரியபள்ளிவாசல் நிர்வாகத்தினரை இன்று சந்தித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நெய்னாகாடு பிரதேச மக்களின் பிரச்சினைகள், நெய்னாகாடு பிரதேசம் சந்திக்கும் சவால்கள் மற்றும் வெள்ள அனர்த்தத்தின் பின்னர் அந்த மக்கள் சந்திக்கும் விடயங்கள் என பல்வேறு விடயங்களை கேட்டறிந்து கொண்டதுடன் அந்த மக்களுக்கான நிவாரண பொதிகளையும் பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் கையளித்தார். 


வெள்ள அனர்த்தத்தில் முழுமையாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேச செயலக பிரதேசங்களுக்கும் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அந்தந்த பிரதேசங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான நவடிக்கைகளை அரச உயர்மட்டங்கள், அரச அதிகாரிகளை அணுகி  முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe