பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் மூத்த பிரஜைகளை வருடம் ஒரு தடவை குறுகிய கால சுற்றுலா அழைத்துச் செல்லும் வேலைத்திட்டம் அனைத்து இடங்களிலும் செயற்படுத்தப்படுகின்றது.
அந்தவகையில், சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குள் வசிக்கும் மூத்த பிரஜைகள் சுமார் 50 பேர்வரை, பிரதேச செயலக அலுவலர்களினால் அண்மையில் (30.01.2024) ஏராவூரில் அமைந்துள்ள கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தினைப் பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர்.