முஹம்மதியா பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா அண்மையில் (30) சம்மாந்துறை தாருஸ்ஸலாம் வித்தியாலய மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சம்மாந்துறை OCD அமைப்பின் தலைவரும் சமூக சேவை செயற்பாட்டாளரும் விஞ்ஞான முதுமானி அஸ்மி யாசின் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அவர்களும் விசேட அதிதியாக கலந்து சிறப்பித்ததோடு தாருஸ்ஸலாம் மகாவித்தியாலய பாடசாலையின் அதிபர் அமீர் அவர்களும் மஜ்லிஸ் அஸ்ஸூறாவின் செயலாளர் அஷ்ஷெக் இஸ்ஹாக் நளீமி அவர்களும் வர்த்தக சம்மேளன பிரதி நசுறுத்தீன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.