Ads Area

இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் விருது வழங்கும் நிகழ்வு : Hima Consultants & Construction நிறுவனத்துக்கு சிறப்பு விருது.

 பாறுக் ஷிஹான்.


இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் 27வது வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை  (26) அக்கரைப்பற்று ஐனா பீச் ஹோட்டலில் இடம்பெற்றது.


தேசிய கட்டுமான சங்கத்தின் அம்பாரை, கல்முனை கிளையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கே.எம்.சக்கரியா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கட்டிட, நிர்மாணத்துறையில் நேர்த்தியாகவும் சிறந்த முறையிலும் பணிகளை முன்னெடுத்த 8 நிறுவனங்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம, இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் டரிட்டன் போல் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை பிரதேச செயலாளர்கள் விசேட அதிதிகளாகவும், பொறியியலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்கள், தேசிய கட்டுமான சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், சங்கத்தின் பிராந்திய தவிசாளர்கள் எனப்பலர் அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்வின் போது 2022/2023 ஆகிய காலப்பகுதிகளில் சிறந்த முறையில் கட்டுமானப் பணிகளை முன்னெடுத்த நிறுவனங்களுக்கு விருது, சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.


அந்த வகையில், கடந்த காலங்களில் சிறந்த முறையிலும் நேர்த்தியாக கட்டுமானப் பணிகளை முன்னெடுத்த பொத்துவில் Hima Consultants & Construction நிறுவனத்துக்கு சிறப்பு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 


நிறுவனத்தின் பணிப்பாளரும் தொழிலதிபருமான ஐ.எல்.ஹில்முடீன் குறித்த விருதினை அதிதிகளிடமிருந்து பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe