இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 76வது சுதந்திர தின விழா சம்மாந்துறை ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் ரமீஸ் ஹாபிஸ் தலைமையில் இன்று(4) நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்காளுக்காக 2 நிமிட மெளன பிராத்தனையும் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நன்றி - சம்மாந்துறை TREND