Ranoos Muhammath Ismail
அண்மையில் கல்முனை சம்மாந்துறை வலயங்களில் உள்ள ஆசிரியர்களில் ஒரு தொகுதியினரை மாவட்டத்திற்கு வெளியில் இடமாற்றம் செய்வதற்கு இடமாற்ற கடிதங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில்.
குறித்த இட மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேற்றும் அதற்கு முன்தினமும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ் எம் முஷாரப் அவர்களின் கவனத்திற்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பொது அமைப்புகள் கொண்டு வந்ததை அடுத்து.
அது மேதகு ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க அவர்களின் கவனத்திற்கு நேரடியாக குறித்த விடயத்தைக் கொண்டு வந்து அதன் பிறகு கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகிய தரப்புக்களுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் நடத்திய கலந்தாலோசனையை அடுத்து குறித்த இடமாற்றங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடனும் கௌரவ ஆளுநர் அவர்களுடனும் தனக்கு இருக்கும் நல்ல நட்பையும் நெருக்கத்தையும் மிகச் சாதுரியமாக பயன்படுத்திய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு நமது மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்..!!